Google Wallet App: கூகுள் வேலட் ஆப் இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை! தெரிந்து கொள்ளுங்கள்

Fri, 26 Apr 2024-1:16 pm,

Google Wallet இந்தியாவில் தொடங்கப்படவில்லை என கூகுள் உறுதிபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் கட்டணத்தை வழங்கும் Google Pay பேமெண்ட்ஸ் தளத்தை Google ஏற்கனவே கொண்டுள்ளது. இதனை அப்டேட் செய்வதிலும் முழு கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. 

 

Google செய்தித் தொடர்பாளர் இது குறித்து பேசும்போது, இந்தியாவில் உள்ள மக்களின் டிஜிட்டல் அனுபவங்களுக்கு அதிக வசதியைக் கொண்டுவர நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம். டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு எளிதான, பாதுகாப்பான அணுகலை மக்களுக்கு வழங்குவதற்காக, Google Pay பயன்பாட்டில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம் என கூறியுள்ளார்.

 

அதன்படி கூகுள் வேலட் ஆப் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் சோதனைகளுக்காக சிலருக்கு கூகுள் பே வாலட் அணுகல் கிடைத்திருக்கலாம். இதேபோல் பல நாடுகளிலும் கூகுள் இதனை சோதனை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இன்னும் வரவில்லை.

 

Google Wallet என்பது அடிப்படையில் ஒரு பயன்பாட்டில் சுடப்பட்ட பல சேவைகளின் தொகுப்பாகும். மறுபுறம், குறைந்தபட்சம் இந்தியா போன்ற சந்தைகளில், ஆக்சிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற பாரம்பரிய வங்கிகளால் வழங்கப்படும் UPI பேமெண்ட்டுகளுக்கான மூன்றாம் தரப்பு பேமெண்ட் பயன்பாடாக Google Pay பயன்படுத்தப்படுகிறது.

 

கூகிள் ஏற்கனவே இந்தியாவில் கூகுள் பேயை உருவாக்குவதிலும் சந்தைப்படுத்துவதிலும் அதிக முதலீடு செய்துள்ளது. மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளது. அதனால் கூகுள் வேலட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா? என்து இப்போதைக்கு கேள்விக்குறி. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூகுள் வாலட் பயன்பாடுக்கு வந்துள்ளது.

 

கூகுள் பே ஆப்பில் செய்ய முடியும் எல்லா வேலைகளையும்.. கூடவே கூகுள் பே ஆப் வழியாக செய்ய முடியாத சில விஷயங்களையும் கூகுள் வேலட் ஆப் வழியாக நம்மால் செய்ய முடியும். இருந்தாலும் கூட கூகுள் நிறுவனம் இதை ஒரு தனி ஆப் ஆக வழங்குகிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link