ராமாயணம் ஸ்டில்ஸ் லீக்.. அழகே பொறாமைப்படும் பேரழகியாக சாய் பல்லவி
ஆதிபுருஷ்: ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன் நடிப்பில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவான திரைப்படம் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டதுடன், கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ராமாயணம்: தற்போது இயக்குனர் நித்திஷ் திவாரி ரன்பீர் நடிகர் கபூரை வைத்து ராமாயணம் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார்.
சாய் பல்லவி: தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் சாய் பல்லவி தற்போது தமிழில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டல் படத்தில் நடிக்கிறார்.
பாலிவுட்டில் சாய் பல்லவி: தற்போது தென்னிந்திய படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி பாலிவுட்டில் பிரம்மாண்ட படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். சாய் பல்லவி ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இந்தியில் அறிமுகமாக உள்ளார். மேலும் அமீர் கான் மகனுக்கு ஜோடியாகவும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
லீக்கான புகைப்படங்கள்: இந்த நிலையில், ராமாயணம் படப்பிடிப்பு தளத்தில் ராமராக ரன்பிர் கபூர், சீதாவாக நடிகை சாய் பல்லவி நடிக்கும் காட்சியின் புகைப்படம் கசிந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.