ராசிகளின் ராஜா சிம்மராசி! சிம்மராசிக்காரர்களின் அடிப்படை இயல்புகள் குணாதிசயங்கள்...

Wed, 24 Jul 2024-7:21 am,

நெருப்பு ராசியான சிம்ம ராசியை சேர்ந்தவர்கள், எப்போதும் உற்சாகத்துடன் உத்வேகத்துடன் பணியாற்றும் இயல்பைக் கொண்டவர்களாக இருப்பார்கள். நீண்ட நேரம் களைப்பில்லாமல் பணியாற்றக்கூடிய சக்தி பெற்றவர்கள்

சிம்ம ராசியினருக்கு எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அவர்களும் தங்களை உயர்வாக எண்ணும் எண்ணம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்

தங்களை பலவீனமாக காட்டிக் கொள்வதை ஒருபோதும் விரும்பாத சிம்ம ராசிக்காரர்கள், தங்கள் கருத்தை வலியுறுத்தி சொல்லிவிடுவார்கள். தயக்கத்தை உடைத்தெறியும் சுபாவம் கொண்டவர்கள்

சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான். எனவே சிம்ம ராசியினருக்கு எப்போதும் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும், எதை செய்தாலும் அது வெளிப்படையாக இருக்கும். பத்து பேர் மத்தியில் இருந்தாலும் தனித்துத் தெரிவார்கள்

சிம்ம ராசியினர் வணங்க வேண்டிய தெய்வம் சிவபெருமான். சிவனை வணங்கி சிம்மராசியினர் செய்யும் காரியங்கள் அனைத்தும் துலங்கும்

லட்சுமி கடாட்சம் சிம்ம ராசியினருக்கு இருக்கும். பணப் பிரச்சனை இருந்தாலும் அது வெளியே தெரியாமல் இருக்கும். லட்சுமி கடாட்சம் கொண்ட தோற்றப்பொலிவு கொண்டவர்களாக இருப்பார்கள்

நெருப்பு ராசியான தனுசுவுக்கும் சிம்மராசியினருக்கும் நல்ல இணக்கம் இருக்கும்

சிம்மத்துக்கும் மேஷத்திற்கும் எப்போதும் நல்ல உறவு இருக்கும் என்பதற்கு காரணம் இரு ராசிகளுமே நெருப்பு ராசிகளாக இருப்பதாகவும் இருக்கலாம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link