பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நோய்கள் குணமாகும் என்பதை தெரிந்துக்கொள்ளுவோம்.
பீட்ரூட் ஜூஸ்ஸில் இரும்புச்சத்து, போலேட் விட்டமின் பி12 போன்ற ரத்த அணுக்களுடைய உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் எல்லாம் வளமான அளவில் இருக்கிறது.
உங்களுடைய உடலின் ரத்த அணுக்களின் அளவு சீராக இருக்க வேண்டும் என நினைத்தால், பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வது நல்லது.
உடலில் ரெட் பிளட் செல்ஸ் இன்கிரீஸ் பண்ணி ஹீமோகுளோபின் என சொல்லக்கூடிய அந்த புரதத்தை அதிகப்படுத்தி அனிமியா ரத்த சோகை குணப்படுத்தலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் ஜூஸ்ஸில் நைட்ரேட் சத்து அதிக அளவில் இருப்பதால், ரத்த குழாய்களை விரிவடைய செய்து, இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும்.
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். பிபி என்று சொல்லக்கூடிய பிளட் பிரஷர் கண்ட்ரோலாக இருக்கும்.
இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த குழாய்களில் கொழுப்பு அடைப்புகள் ஏற்படுவதை, பீட்ரூட் ஜூஸ் எடுத்துக் கொள்ளும் போது தடுக்கலாம்.
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இதயத்தை ஆரோக்கியமான முறையில பராமரிக்கலாம். இதனால் ஸ்ட்ரோக் , பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராது.
பீட்ரூட் ஜூஸ் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் ஒரு ஏற்ற பானம். உடற்பயிற்சிக்கு தேவையான ஸ்டாமினாவை ஆற்றலை பீட்ரூட் ஜூஸ் வழங்கும்.
பீட்ரூட் ஜூஸ் இருக்கக்கூடிய பைபர் என்று சொல்லக்கூடிய நார் சத்து உங்களுடைய உடல் எடையை குறைப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.