LIC அளித்த good news: இனி பாலிசிதாரர்கள் இந்த எளிதான வழியிலும் கட்டணம் செலுத்தலாம்
LIC அதன் அனைத்து டிஜிட்டல் கட்டண வசதிகளையும் வழங்க Paytm ஐ நியமித்துள்ளது. பல கட்டண கேட்வேக்களுடனான ஒப்பந்த பேச்சுக்களுக்குப் பிறகு, LIC தற்போது Paytm உடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. LIC-யின் பல்வெறு கடட்ணங்கள் டிஜிட்டல் பயன்முறையில் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடக செய்திகளின் படி, LIC-யின் டிஜிட்டல் கட்டண வசதிக்காக ஒப்பந்தத்தைப் பெற 17 கட்டண கேட்வேக்கள் ஏலத்தில் பங்குகொண்டன. பல கட்டண சேவைகளில், Paytm இன் வலுவான இருப்பு அதற்கு ஆதரவாக செயல்பட்டது. மீதமுள்ள கட்டண கேட்வேக்கள் UPI அல்லது கார்டுகள் போன்ற சில பிரிவுகளில் மட்டுமே சிறப்பாக இருந்தன. Paytm பல அம்சங்களில் சிறப்பான சேவையை வழங்கியது. புதிய ஒப்பந்தம் கட்டணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கும். அதிக கட்டணம் செலுத்தும் ஆப்ஷன்கள் கிடைக்கும். கட்டண வாலட்டுகள் மற்றும் வங்கி வசதிகள் போன்ற அம்சங்களும் இதில் கிடைக்கும்.
அறிக்கையின்படி, கொரோனா தொற்றுநோயின் போது LIC டிஜிட்டல் கட்டணங்களில் அதிகப்படியான முன்னேற்றத்தைக் கண்டது. இந்த காலகட்டத்தில், LIC டிஜிட்டல் பயன்முறையின் மூலம் ரூ .60,000 கோடி பிரீமியத்தை வசூலித்தது. வங்கிகள் மூலம் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இவை சுமார் 8 கோடி பரிவர்த்தனைகளாக இருக்கும் என்றும், இது மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
LIC, Paytm மூலமாக பிரீமியம் கட்டணங்கள் மட்டுமல்லாமல், அனைத்து வித கட்டண வசூல்களையும் டிஜிட்டல் முறையில் பெற தயாராகியுள்ளது. இதில், காப்பீட்டு முகவர் மூலம் பணம் அனுப்புவதும் அடங்கும். LIC பாலிசி உள்ளவர்கள், முன்னரும் தங்கள் பிரீமியத்தை Paytm மூலம் செலுத்த முடிந்தது. இது தவிர, GooglePay, PhonePe மூலமும் கட்டணத்தை செலுத்தலாம்.
Paytm தளத்துக்கு சென்று, LIC ஐ சர்ச் செய்யவும். இங்கே நீங்கள் உங்கள் பாலிசி எண்ணை உள்ளிட வேண்டும். நீங்கள் பாலிசி எண்ணை உள்ளிட்டவுடன், பிரீமியத்தைக் காண்பீர்கள். Proceed என்பதைக் கிளிக் செய்து கட்டணத்தை செலுத்தவும்.