கிட்னி பிரச்சனை இருக்கா... இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க!

Sat, 03 Feb 2024-9:00 pm,

பழுப்பு அரிசி ஆரோக்கியமான உணவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதில் அதிக அளவு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்களிலும் அதிக பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளது. புரதமும் அதிகம் உள்ளது. இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாவது சிறுநீரக நோயாளிகளுக்கு நல்லதல்ல.

சிறுநீரகம் பிரச்சனை உள்ள நோயாளிகள் முழு கோதுமை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது சத்தான உணவு தான் என்றாலும், இதில் மிக அதிக நார்ச்சத்து இருப்பதன் காரணமாக சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

 

பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட உணவுகள் நல்லதல்ல. இவற்றில் சோடியம் அதிகம் இருப்பதாலும் இவற்றின் ஆயுளை நீடிக்க உப்பு மற்றும் பிரசர்வேட்டிவ் சேர்க்கப்படுவதாலும் சிறுநீரக நோயாளிகள் இதனை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

 

சிறுநீரக நோயாளிகளுக்கு அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்த உணவு நல்லதல்ல. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு இருப்பதால் அதனை சிறுநீரக நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சோடா சேர்த்த பானங்களில் கலோரிகளும் அதிகம், சர்க்கரையும் மிக அதிகம். அதோடு சோடாவில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. சோடாவில் பாஸ்பரஸும் சேர்க்கப்படுகிறது. எனவே நோயாளிகள் இதனை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே சோடா பானங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link