Train Accident: கடந்த 13 நாட்களில் 8 ரயில் விபத்துகள்.. தொடரும் உயிர் பலிகள்!

Tue, 30 Jul 2024-5:19 pm,

இந்த மாதத்தில் நடந்த ரயில் விபத்துகள் குறித்து பார்ப்போம். (Image Credit: ANI / IANS / PTI / Social Media)

ஜூலை 30: (செவ்வாய்க்கிழமை) ஜார்க்கண்டில் அதிகாலையில் ஹவுரா-மும்பை மெயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர். மும்பை நோக்கிச் சென்ற ரயில், சக்ரதர்பூர் அருகே, ராஜ்கர்ஸ்வான் வெஸ்ட் அவுட்டர் மற்றும் பாரபாம்பூ இடையே, சக்ரதர்பூர் பிரிவில் அதிகாலை 3:45 மணியளவில் தடம் புரண்டது.

பீகார் தர்பங்காவிலிருந்து புதுடெல்லி செல்லும் பீகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் இன்ஜினில் இருந்து  இரண்டு துண்டாக பிரிந்தது. ஆனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஜூலை 26 (வெள்ளிக்கிழமை) அன்று புவனேஸ்வரில் உள்ள மஞ்சேஸ்வர் ஸ்டேஷன் யார்டில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

21 ஜூலை (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள திஜாரா கேட் அருகே சரக்கு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. உயிர் சேதம் இல்லை.

21 ஜூலை (ஞாயிற்றுக்கிழமை ) அன்று மாலை 6 மணியளவில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. உயிர் சேதம் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

ஜூலை 20 (சனிக்கிழமை ) அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹா ரயில் நிலையத்திற்கு அருகில் மாலை சரக்கு ரயில் தடம் புரண்டது. உயிர் சேதம் இல்லை.

ஜூலை 19 (வெள்ளிக்கிழமை) குஜராத்தில் வல்சாத் மற்றும் சூரத் ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் வேகன் தடம் புரண்டு ரயில் விபத்து 

ஜூலை 18 (வியாழக்கிழமை) அன்று உத்தரபிரதேசத்தில் கோண்டா அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது நான்கு பேர் பலியாகினர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link