சித்தா படத்தில் சித்தாத்திற்கு பதிலாக நடிக்கயிருந்த பிரபல ஹீரோ?
சிவகார்த்திகேயன் தற்போது பிரபலமான நடிகருள் ஒருவராக வளம் வந்துள்ளார். அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு பல படங்களில் வாய்ப்பு வந்தும் அதனை மறுத்துவிட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்துள்ளது.
அள வைகுண்டபுரம்லு : தெலுங்கில் வெற்றிப்பெற்ற அல்லு அர்ஜுனின் ‘அள வைகுண்டபுரம்லு’ படத்தினை ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கயிருந்ததாகவும் ஆனால் அதையும் வேண்டாம் என மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சூரரைப் போற்று : சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தமிழ் டாப் ஹிட் படம் சூரரைப் போற்று இப்படத்தில் பாமர மக்களின் ஒருவனான சூர்யா ’மாரா’ பெயர்கொண்டு ஊர் கிரமாத்தில் வாழ்ந்து வருகிறார். இவரின் நோக்கம் சொந்தமாக ஒரு விமானம் தயாரிக்க வேண்டும். அதில் பாமர மக்கள் பயணம் செய்யும் வசதி அனைத்தும் இருக்க வேண்டும் என்று ஆசை மற்றும் லட்சியம்.
ராஜா ராணி : அட்லி இயக்கத்தில் நயன்தாரா, நஸ்ரியா, ஆர்யா, சத்தியராஜ் மற்றும் ஜெய் ஆகியோர் நடிப்பில் வெளியான காதல் கலந்த எமோஷ்னல் படம் ‘ராஜா ராணி’ இப்படத்தினை சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டதாகவும், இவர் மறுத்த ராஜா ராணி படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
சித்தா : சித்தா படத்தில் சித்தாதிற்கு மிகப்பெரிய ஹிட் ஆன இப்படத்தினை சிவக்காத்திகேயனிடம் முன்னதாக கதையைக் கூறியதாகவும் அதற்கு சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
டாடா : கவின் மற்றும் அபர்னா இருவரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘ டாடா’ இப்படத்தினை சிவகார்த்திகேயனிடம் முதலில் கூறியதாகவும் அந்த கதையை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடித்து, மேலும் அதிகமாக படத்திற்காக செலவிட்ட படம் இந்தியன் - 2 . இப்படம் கோடிக்கணக்கில் செலவுசெய்து பல ரிஸ்க் எடுத்து வெளியிட்ட பிரமாண்ட படம். ஆனால் இது பெரியாதாக ஒன்றும் வசூல் செய்யவில்லை என்றாலும் இதில் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த வாய்ப்பு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பிரேமம் : மலையாள பிரியர்கள் அனைவரும் இன்றும் விரும்பி பார்க்கும் காதல் நிறைந்த படம் ‘பிரேமம்’ இப்படத்தினை தமிழில் ரீமேக் செய்வதாக இருந்தபோது சிவகார்த்திகேயனிடம் கதையை சொல்லி தமிழில் எடுக்கலாம் என்றபோது சிவகார்த்திகேயன் கதை வேண்டாம் என்று தவிர்த்து விட்டாராம் என்று சொல்லப்படுகிறது.