இந்த 8 வகையானப் பொருட்கள் உங்கள் பிரிட்ஜில் இருந்தால் எடுத்துவிடுங்கள் !
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாதப் பொருட்கள். இவையெல்லாம் உங்கள் வீட்டின் காற்றுள்ள இடத்தில் வைக்கவும்.
தக்காளியை அனைவரின் வீட்டில் பிரிட்ஜில் பார்த்திருப்போம். எந்த வீட்டிலும் வெளியில் இருந்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் தக்காளியை பிரிட்ஜில் வைக்கக்கூடாது என்று எத்தனைப் பேருக்கு தெரியும். எளிதில் அழுகும் தன்மை தக்காளிக்கு உண்டு. அப்படியே பிரிட்ஜில் வைத்தாலும் சில நாட்களிலே நீங்கள் பயன்படுத்திவிடுங்கள். நீண்ட நாள் பிரிட்ஜில் வைத்திருக்காதீர்கள்.
வெங்காயம் போன்றுதான் இந்த பூண்டும். பூண்டை மக்கள் உங்கள் வீட்டில் காற்றுள்ள இடத்தில் வைத்திருப்பீர்கள். அதற்குக் காரணம் என்னவென்று இங்குத் தெரிந்துக்கொள்ளுங்கள். பூண்டின் தோல் மற்றும் உள்ளிருக்கும் பூண்டு மிகவும் லேசான தன்மையில் இருக்கும். இதற்கு குளிர் செட் ஆகாது என்றே சொல்லலாம்.
நாம் உணவு சாப்பிட்ட பிறகு தவறாமல் சாப்பிடும் தினமும் எடுத்துக்கொள்ளும் பழம் இந்த வாழைப்பழம். இந்த பழத்தை நீங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் வாழைப்பழத்தின் தோல் விரைவில் கருப்பு நிறத்திற்கு மாறி அழுகிவிடும்.
அனைவருக்கும் தெரிந்த ஒன்று வெங்காயம். அனைவரின் வீட்டில் வெளியில் காற்றுள்ள இடத்தில் வைத்திருப்பிர்கள். இதனைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள். வெங்காயம் நீர் பட்டாலோ அல்லது குளிர்சாதனப்பெட்டியில் இருந்தாலோ சீக்கிரம் பூசனம் பிடித்துவிடும்.
தேன் பொதுவாக அனைத்து மக்களும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கிறீர்கள். அதற்குக்காரணம் எறும்பு நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இதை செய்து வருகிறீர்கள். ஆனால் இனி இதை செய்யாதீர்கள். தேனை நீங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதனால் திரவம் போல் இருக்கும் தேன் திடவமாக மாறிவிடும்.
அவோகடோ என்பது வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும். இந்த பழம் வீட்டில் சாதரணமாக காற்றுள்ள இடத்தில் வைத்தால் போதுமானது. நீங்கள் இதனை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும்போது விரைவில் அழுகிவிடும்.
உருளைக்கிழங்கு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது. இந்த உருளைக்கிழங்கு குளிராக இருந்தால் சுவை முழுவதும் காணாமல்போய்விடும். எனவே இதனை பக்குவமாக காற்றுள்ள இடத்தில் வைப்பதே சிறந்தது.
நீங்கள் ரொட்டியை உங்கள் வீட்டின் குளீர்சாதனப்பெட்டியில் வைத்திருப்பவர்களா? இனி வைக்காதீர்கள். ஏனெனில் ரொட்டி மிருதுவான தன்மையைக் கொண்டுள்ளது. நீங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும்போது மிகக்கடினமாக மாறிவிடும். சாப்பிடுவதற்கு நன்றாக இருக்காது. வீணாகிவிடும்.