கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்! அதுவும் இவர் படத்திலா?

Wed, 10 May 2023-2:33 pm,

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு ரியாலிட்டி ஷோவின் நடுவராக நடிக்கிறார், இப்படத்திற்கான இவரது காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது.

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி நடிகர் ஜீவாவும் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அவரது படத்தில் லோகேஷ் கேமியோ ரோலில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இதுதவிர சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அன்பரிவ் இயக்கும் புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் முன்னணி நடிகர்களாக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link