திருப்பதியில் லோகேஷ் கனகராஜ்! நண்பர்களுடன் சுவாமி தரிசனம்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள தளபதி விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19, 2023 அன்று வெளியாக உள்ளது.
படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் எழுத்தாளர் ரத்ன குமார், லியோவின் மாபெரும் வெற்றிக்காக திருமலைக்கு பாத யாத்திரை மேற்கொண்டனர்.
லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
லியோவில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் மற்றும் பலர் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.