லோகேஷ் கனகராஜ் - அனிருத் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்?
லோகேஷ் கனகராஜ் - அனிருத் காம்போ இதுவரை 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' ஆகிய இரண்டு அசுர வெற்றிகளை வழங்கியுள்ளது.
மேலும் தற்போது தளபதி விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில், லோகி மற்றும் அனிருத் இருவரும் ஒரு புதிய படத்தில் ஹீரோக்களாக நடிக்கபோவதாக தகவல் வெளியானது.
தற்போது அனிருத்-லோகேஷ் கனகராஜ் திட்டம் தெரியாத காரணங்களால் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த திட்டம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் இல்லை.