WTC: 9/11 தாக்குதலின் புகைப்பட நினைவேந்தல்; அன்பே சிவம் என்னும் ஒற்றை மனிதர்
செப்டம்பர் 11, 2001 அன்று எடுக்கப்பட்ட இந்த கோப்பு புகைப்படத்தில், ஒருவர் நின்றுக்கொண்டு யாருக்கும் உதவி தேவையா என்று குரல் கொடுக்கிறார். உலக வர்த்தக மையம் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்கு மத்தியிலும், மனிதாபிமானத்தின் உச்சம் காட்டி, அன்பே சிவம் என்று நிரூபிக்கும் மனிதர்.
(Photograph:AFP)
செப்டம்பர் 11, 2001 அன்று எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், உலக வர்த்தக மையத்தின் இரண்டு கோபுரங்களில் முதலாவது இடிந்து விழுந்த பிறகு புகை மூட்டமாக காணப்படுகிறது. (Photograph:AFP)
செப்டம்பர் 11, 2001 அன்று எடுக்கப்பட்ட இந்தக் புகைப்படத்தில், நியூயார்க்கின் கீழ் மன்ஹாட்டனில் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களின் இடிபாடுகள்.
(Photograph:AFP)
நியூயார்க் நகரில் உலக வர்த்தக மைய கோபுரம் ஒன்று இடிந்து விழுந்ததால், பாதசாரிகள் சம்பவ இடத்திலிருந்து ஓடினர்.
(Photograph:AFP)
அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் பென்டகனில் உள்ள பாதிப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்
(Photograph:AFP)
நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இடிபாடுகளில் தப்பிப்பிழைத்தவர்களைத் தேடும் போது தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்புப் பணியாளர்கள். இந்த புகைப்படம், 2001 செப்டம்பர் 13ம் தேதியன்று நியூயார்க் நகர அவசரநிலை நிர்வாக அலுவலகத்தால் வெளியிடப்பட்டது.
(Photograph:AFP)
செப்டம்பர் 11, 2001 அன்று எடுக்கப்பட்ட இந்த கோப்பு புகைப்படத்தில், நியூயார்க்கில் இரண்டு விமானங்கள் கட்டிடத்தில் மோதியதில் WTC இன் இரட்டை கோபுரங்கள் எரிந்தன
(Photograph:AFP)
செப்டம்பர் 11, 2001 அன்று எடுக்கப்பட்ட இந்தக் கோப்புப் புகைப்படத்தில், கடத்தப்பட்ட வணிக விமானம் நியூயார்க்கில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வானளாவிய கட்டிடத்தில் மோதுவதற்கு சற்று முன்பு உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை நெருங்கியது காட்டப்பட்டுள்ளது.
(Photograph:AFP)