18 ஆண்டுகளுக்கு பின் ராகுவின் பிடியில் சிக்கும் சூரியன்! ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம்!
கிரகங்களின் ராஜாவான சூரியன் மீனத்தை விட்டு மேஷ ராசியில் நுழையப் போகிறார். ராகு கிரகம் ஏற்கனவே மேஷத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், சூரியனின் பிரவேசத்தினால் ராகு மற்றும் சூரியன் இணைவார்கள். இதனால், சில ராசிகளி நிதி நிலைமை பாதிக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேஷ ராசியில் சூரியனும் ராகுவும் இணைந்திருக்கப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு பண விரயத்துடன், உடல் ஆரோக்கிய பாதிப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதயம் சம்பந்தமான நோய்கள் வரலாம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
சிம்ம ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், தந்தைக்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருக்கலாம். இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். பண விரயத்தினால் நிதி நிலைமை பாதிக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இந்தக் கூட்டணி அமையப் போகிறது . அத்தகைய சூழ்நிலையில், பண விரயத்துடன் ஆரோகியமும் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.