மகரத்தில் புதன் பெயர்ச்சி: பிப்ரவரி 1 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

Tue, 30 Jan 2024-3:55 pm,

புதனின் ஆதிக்கம் ஒருவர் மீது இருந்தால், அந்த நபர் அறிவாற்றல் மிக்கவராகவும் புத்திசாலியாகவும் திகழ்கிறார். பிப்ரவரி 1ஆம் தேதி புதன் மகர ராசிக்குள் நுழைகிறார். 

மகர ராசியில் பெயர்ச்சி ஆகி, புதன் சூரியனுடன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குவார். இது செல்வம் பெற மிகவும் மங்களகரமான யோகமாகக் கருதப்படுகிறது. புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் மூலம் தொழிலில் மகத்தான பலன்கள் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். அனைத்து பணிகளும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உங்களுக்கு சாதகமான சூழல் அமையும். நிதி விஷயங்களில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செலவு செய்யுங்கள்.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் சுப பலன்கள் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மேலும் பணம் சம்பாதிக்கும் ஆசை மேலும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் உங்கள் எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எளிதாக எடுப்பீர்கள். உங்கள் தொழிலில் நீங்கள் உச்சத்தை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காதல் உறவுகளில் உங்கள் துணையுடன் ஒருங்கிணைப்பைப் பேணுங்கள். 

புதன் பெயர்ச்சியின் சுப பலன்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும், வெற்றிப் பாதையில் முன்னேறுவீர்கள். புதனின் பெயர்ச்சியுடன், உங்கள் தொழிலில் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். உங்கள் இலக்குகளை எளிதாக அடைய முடியும். இந்த நேரத்தில் உங்கள் வேலைகளை அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செய்தாலும் அவற்றில் வெற்றி கிடைக்கும். 

புதனின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல பலன்களை அதிகரிக்கும். உங்கள் வீட்டில் சௌகரியங்களும், வசதிகளும் பெருகும். உங்கள் குடும்பத்தின் அனைத்துத் தேவைகளையும் எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் தொழிலில் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் பணியிடத்தில் சிறந்த பணிச்சூழல் இருக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு வலுவடையும். 

புதனின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்தை அதிகரிக்கும். மூதாதையர் சொத்துக்களால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள், உங்கள் செல்வம் பெருகும். இருப்பினும், உங்கள் தொழிலில் நீங்கள் நிறைய அழுத்தங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் கடினமாக உழைத்து வெற்றி கிடைத்தால் அதிக அழுத்தத்தை உணர மாட்டீர்கள். காதல் வாழ்க்கை மற்றும் குடும்ப விஷயங்களில் கண்ணியமாக பேசுவது நல்லது. இல்லையெனில், உங்கள் உறவுகள் பாதிக்கப்படலாம். சொந்த தொழில் செய்பவர்கள் அதிக லாபம் அடைவார்கள். 

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link