மார்ச் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அற்புதங்கள் நிகழும், கனவு நிஜமாகும், லாபம் பெருகும்
மார்ச் மாதம் பலவித நல்ல செய்திகளை கொண்டுவரும். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
வேலையிடத்தில் வேலை பளு மற்றும் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். நிதி நிலை மேம்படும். புதிய வாகனம் மற்றும் சொத்து வாங்கும் யோகம் இப்போது உள்ளது
இந்த மாதம் முழுவதும் கிரக நிலைகள் உங்களுக்கு அனுகூலமாக உள்ளன. நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் இந்த காலத்தில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குதூகலமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்
இந்த மாத துவக்கத்திலிருந்து வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும். பணியிடத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் இருக்கும்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் பலவித வெற்றிகளை அள்ளித் தரும். உங்கள் திறமை அதிகரிக்கும். எனினும் நீங்கள் நினைத்த காரியம் முடியும் வரை அதைப்பற்றி அனைவரிடமும் சொல்ல வேண்டாம். பணியிடத்தில் எதிரிகள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். கனவமாக இருக்க வேண்டிய காலம் இது.
நிதி நிலையில் ஏற்ற இறக்கம் இருக்கும் . மாணவர்களுக்கு நேரம் அனுகூலமாக உள்ளது. உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிரிகளிடம் ஜாக்கிரதியாக இருங்கள்
வியாபார கண்ணோட்டத்தில் இந்த மாதம் மிகவும் லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விருந்தினர்களின் வருகையால் குடும்பச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உணர்ச்சி பெருக்கால் எடுக்கப்படும் முடிவுகள் பிரச்சனைகளை உண்டு பண்ணலாம். கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்படலாம்.
இந்த மாதம் முழுவதும் பல வெற்றிகளை காண்பீர்கள். தைரியம் மற்றும் நம்பிக்கையின் முழுமையான பலன் இப்போது கிடைக்கும். பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். உங்களுக்கு கல்வியிலும் நாட்டம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்
இந்த மாதம் கிரகநிலைகள் காரணமாக உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நிதிநிலை மேம்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு இருக்கும்.
மார்ச் மாதம் ஏற்பட உள்ள கிரக மாற்றங்கள் காரணமாக உங்களுக்கு திடமும் ஆரோக்கியமும் வலுப்பெறும். சட்ட சிக்கல்கள் இருந்தால் அவை இப்பொழுது சுமுகமாக முடியும். உடல் நலலில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது. வீடு கட்ட இது ஏற்றும் நேரமாக உள்ளது. நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்
கிரக மாற்றங்களின் காரணமாக வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். தேவையில்லாத செலவு இருக்கும். ஆனால் அதற்கேற்ற வரவும் இருப்பதால் நிதி நெருக்கடி ஏற்படாது. பேசுவதில் கவனம் தேவை
நிதி நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் பொருளாதார நிலை திடமாக இருக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள். குழந்தை பாக்கியம் வேண்டி இருப்பவர்களுக்கு இப்பொழுது நல்ல செய்தி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.