ஐப்பசி மாத ராசிபலன்! சூரியனின் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! தீபாவளி அதிரடிக்கு ரெடியா?
சூரியன் கன்னி ராசியிலிருந்து விலகி துலாம் ராசியில் பிரவேசிக்கும் போது ஐப்பசி மாதம் உருவாகும். அடுத்த சூரியப் பெயர்ச்சி வரை ஐப்பசி மாதம் இருக்கும். இந்த மாதம், சிலருக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும், மற்றவர்களுக்கு, இந்த நேரம் புதிய வாய்ப்புகளையும் வெற்றிகளையும் தரும். யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், யாருக்கு இந்த மாற்றம் பலனளிக்கும்? தெரிந்து கொள்வோம்...
அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் எடுத்த காரியங்கள் நிறைவேறும். சமூகப் பணிகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மேஷ ராசியினர் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது
கனிவான பேச்சுக்கள் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளும் ரிஷப ராசியினருக்கு உகந்த சூழல் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்கும் உங்களின் தேவைகள் தானாகவே நிறைவேறும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை ஐப்பசி மாதத்தில் நிலவும்
மிதுன ராசியினர், வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்துச் சென்றால் உயர்வடையலாம். பணியாளர்கள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட்டால் இதுவும் கடந்து போகும் என்ற நிலை ஏற்படும்
கடக ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் இழுபறியாகவே இருக்கும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிக்க முடியாது. கடன் தொடர்பான நெருக்கடிகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ந்தாலும், அதற்கான செலவுகள் உங்களுக்கு சுமையாக மாறும்
தொழில் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தொழில் தொடர்பான புரிதல் மேம்படும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்கும் போது சிந்தித்துக் கொடுக்கவும். ஐப்பசி மாதம் சிம்ம ராசியினருக்கு நன்றாக இருக்கும், சேமிப்பு அதிகரிக்கும்
சூரிய பெயர்ச்சியால் கன்னி ராசியினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் நலன் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழல் உண்டாவதால், குடும்பத்தினரிடம் புரிதல் உருவாகும். முதலீடுகள் செய்ய ஏற்ற மாதம் இது
துலாம் ராசியில் சூரியன் பிரவேசிப்பதால் துலா ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கிறது. வியாபாரப் பணிகளில் நன்மை உண்டாகும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெளியூர் பயணங்களால் லாபம் அதிகமாகும், அனுபவமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள உகந்த தருணம் இது. உடன்பிறந்தவர்களின் உதவியால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
குடும்பத்தின் மீது வைத்திருந்த அவநம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்பட்டாலும், அதனை யாரும் நம்பமாட்டார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சாதகமற்ற சூழல் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே அசாதாரணமான நிலைமை மாறும்
மகர ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் அமர்க்களமாக இருக்கும். அனைவரின் அன்பையும் ஆதரவுகளையும் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களினால் உறவில் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். எதை செய்தாலும் சிந்தித்துச் செயல்படுவது அவசியம்
வங்கியில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், தொழில் தொடர்பான புரிதல் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்பட்டால் வர்த்தகம் பெருகும்.
தனவரவு தாராளமாக இருக்கும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். தொழில் சிறக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உற்றார் உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது