சனியின் வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவு
சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். இதனிடையே வக்ர நிலையில் நகர்ந்து வரும் சனி பகவான் வருகிற நவம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைய போகிறார்.
நவம்பர் முதல் சில ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் ஆசி கிடைக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலை மேம்படும். தொழிலில் முன்னேற்றம் அடையும். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலா. எனவே சனி வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்: நவம்பரில் நடக்கப் போகும் சனியின் வக்ர நிவர்த்தியால் சாதகமான பலன்களை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான தாக்கத்தை பெறலாம். அதிர்ஷ்டத்தால் மன மகிழ்ச்சி அடையும். பணியிடத்தில் புதிய சாதனைகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறலாம். வியாபாரத்தின் மூலம் லாபமும், பண வரவும் உண்டாகும்.
மிதுனம்: நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். சனியின் வக்ர நிவர்த்தி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பண வரவு உண்டாகும். வேலையில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் நல்ல சூழல் இருக்கும். நிதி ஆதாயம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். லாப மழை கொட்டும். தடுங்கலான வேலைகள் அனைத்தும் வேகமெடுக்க தொடங்கும். கூடுதல் வருமானம் பெறுவீர்கள். உங்கள் மரியாதை சமூகத்தில் உயரும். பணியில் புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.