ஒரு கோடி ரூபாய் இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம்? இந்த காரில் ஒன்றை வாங்கலாம்!
சொகுசு கார்களின், தோற்றம் மற்றும் வடிவமைப்பு பிரமிக்கத்தக்கதாய் இருக்கிறது
1 கோடி ரூபாய்க்கு மேல் விலை கொண்ட கார்களின் பட்டியலைப் பார்ப்போம். சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து புதிய தயாரிப்புகளை கொண்டு வருகின்றன.
ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் காரின் விலை சுமார் 9.5 கோடி ரூபாயில் இருந்து தொடங்குகிறது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடம் மட்டுமே இந்த கார் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் சக்திவாய்ந்த வி12 இன்ஜினைக் கொண்டுள்ளது.
உலகின் சிறந்த சொகுசு கார்களில் பென்ட்லி முல்சேன் காரும் ஒன்று. இந்த காரின் விலை ரூ.5.5 கோடியில் இருந்து தொடங்குகிறது. பென்ட்லி முல்சேன் கிளாசிக் பிரிட்டிஷ் ஆடம்பரத்தை சக்திவாய்ந்த செயல்திறனுடன் இணைக்கிறது. இந்த கார் கையால் செய்யப்பட்ட உட்புறம் மற்றும் இரட்டை டர்போ V8 இன்ஜினைக் கொண்டுள்ளது.
லம்போர்கினி என்ற பெயரைக் கேட்டாலே கார் பிரியர்களின் முகத்தில் புன்னகை பூக்கும். ஆனால் அனைவருக்கும் இந்த காரை வாங்க முடியாது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.25 கோடி ஆகும், இது வி12 இன்ஜின், அதிநவீன ஏரோடைனமிக்ஸ் மற்றும் அசத்தலான வடிவமைப்புடன் கூடிய உயர் செயல்திறன் கொண்ட சூப்பர் காராகும்.
சொகுசு கார் தயாரிப்பில் முக்கியமான ஃபெராரி கார் நிறுவனத்தின் ரூ.7.5 கோடி மதிப்புள்ள கார் ஃபெராரி SF90 Stradale. இது, ஃபெராரியின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் சூப்பர் கார் ஆகும், V8 இன்ஜினை மின்சார மோட்டாருடன் இணைத்துள்ள இந்த கார் பார்ப்பவர்களின் மனதை கொள்ளைக் கொள்ளும் கார் ஆகும்
சொகுசு கார்களில் ஆஸ்டன் மார்ட்டின் முக்கியமானது. ஆஸ்டன் மார்ட்டின் DBash சூப்பர்லெகெராவும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. காரின் விலை ரூ.4.5 கோடியில் இருந்து தொடங்குகிறது. ஆஸ்டன் மார்ட்டின் DBS சூப்பர்லெகெரா என்பது 5.2 லிட்டர் ட்வின்-டர்போ V12 இன்ஜின் மூலம் இயக்கப்படும் கார் ஆகும்