உதயமாகிறார் சனி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்.. பணம், புகழ், பதவி வந்து சேரும்

Sat, 17 Feb 2024-4:22 pm,

சனிபகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் எந்த வித பாரபட்சமுமின்றி பலன்களை அளிக்கிறார். 

சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அவர் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் உள்ளார். ஒரே ராசியில் அவர் நீண்ட காலத்திற்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.

அனைத்து கிரகங்களையும் போலவே சனிபகவானும் ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என அனைத்து விதமான மாற்றங்களையும் மேற்கொள்கிறார்.

தற்போது சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். மார்ச் 18 ஆம் தேதி சனி பகவான் உதயமாக உள்ளார்.

சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உருவாகும். இவர்கள் வாழ்வில் செல்வச்செழிப்பு அதிகமாகும். இவர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சனி உதயம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமானதாக கருதப்படுகின்றது. பணியிடத்தில் இவர்களது நிலை முன்னேறும். அதிகப்படியான லாபம் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். நிதிநிலை நன்றாக இருக்கும். புதிய வேலைகளை தொடங்க விரும்பினால் இப்போது அதை செய்யலாம்.

சனி உதயமான உடனேயே துலா ராசிக்காரர்களுக்கு நேரம் மாறிவிடும். இவர்களது அதிர்ஷ்டம் பிரகாசமாகும். சனி பகவானின் அருளால் இவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றிகளும் கைகூடும். துலா ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் சுபமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். மகிழ்ச்சியும் குதூகலமும் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்

 

சனி பகவானின் அருள் பெற சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை சொல்ல வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு சனி பகவான் எப்போதும் எந்தவித தொந்தரவையும் அளிப்பதில்லை. உங்களால் ஆனவரை நலிந்தோருக்கு உணவு உடை கொடுத்து உதவலாம்

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link