‘சாக்லேட் பாய் என்றாலே மேடிதான்..’ பெண்களின் இதயங்களை அலைபாயவிட்ட மாதவனுக்கு பிறந்தநாள்!
90'ஸ் பெண்களின் கனவு கண்ணனாக விளங்கியவர், மாதவன்.
தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கினார்.
இவர் நடிப்பில் வெளியான மின்னலே, அலைபாயுதே, ஜே ஜே போன்ற படங்கள் நிறைய நாட்கள் திரையரங்கில் ஓடி, நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்தியிலும் இவர் நடித்திருந்த தனு வெட்ஸ் மனு, 3 இடியட்ஸ், 13பி போன்ற படங்கள் மாபெறும் ஹிட் அடித்தன.
சமீபத்தில் ராக்கெட்டரி என்ற படத்தினில் இவர் நடித்திருந்தார். இதற்காக இவருக்கு நிறைய பாராட்டு கிடைத்தது.
தனது மகனை தேசிய நீச்சல் வீரராக வளர்த்து வருகிறார், மாதவன்.
அலைபாயுதே படம் மூலம் சாக்லேட் பாயாக அறிமுகமான இவர், 2016ஆம் ஆண்டு வெளியான இறுதிசுற்று படம் மூலம் ஆளே மாறி முழு ரக்கட் பாயாக மாறினார்.
மாதவனின் பிறந்தநாளையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.