வேகமாக உடல் எடையை குறைக்கணுமா? சுலபமாக குறைக்கலாம்.... இதை குடித்தால் போதும்
உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் கவனக்குறைவால் அனைத்து வயதினரும் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொப்பை கொழுப்பைக் (Belly Fat) குறைக்க, நாம் பல வகையான முயற்சிகளை எடுக்கிறோம்.
உடல் எடையை குறைக்க சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். இயற்கையான வழியில் தொப்பை கொழுப்பைக் குறைத்து உடல் எடையையும் குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓம நீர்: ஓமத்தில் நார்ச்சத்தும், பல வகையான தாதுக்களும் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை சீராக்கி, தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையையும் குறைக்க உதவுகின்றது.
எலுமிச்சை தண்ணீர்: தினமும் எலுமிச்சை தண்ணீரை உட்கொள்வது உடல் எடையை குறைக்க மிகவும் எளிய மற்றும் உறுதியான வழியாக கருதப்படுகின்றது. இதில் உள்ள வைட்டமின் சி உடல் எடை குறைக்க உதவுவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
சீரகத் தண்ணீர்: சீரகத்தில் அதிக அளவிலான நன்மைகள் இருக்கின்றன. இது செரிமானத்தை சீராக வைத்துக் கொள்கிறது. கூடுதல் கொழுப்பை கரைக்க உதவும் சீரகத் தண்ணீர் தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை எரிக்க முக்கியமானதாக கருதப்படுகின்றது.
பிளாக் காபி: பிளாக் காபி குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் வேகமாக மேம்படுகிறது. பிளாக் காபி உடல் எடையை குறைக்கவும், கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவுகிறது.
கிரீன் டீ: ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ள கிரீன் டீ எடை இழப்பில் பெரிய அளவில் உதவும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
இவை தவிர ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கை முறை, தேவையான அளவு உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவையும் உடல் எடையை குறைக்க மிகவும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.