இந்த பொண்ணுக்கு இவ்ளோ வயசா? ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மகள் பற்றிய விவரம்!

Mon, 07 Oct 2024-2:44 pm,

மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, சமீபத்தில் ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக களமிறங்கியிருக்கிறார் சாச்சனா. 

இவர், சில வாரங்களுக்கு முன்பு வெளியான மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரை பார்த்த பலரும் இவரை சிறுமி என நினைத்துக்கொண்டனர். 

மகாராஜா திரைப்படத்தில், சச்சனாவின் பெயர் அம்மு. தனக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சரிவர செய்து ரசிகர்களை கவர்ந்த இவர், இன்னும் ஒரு சில படங்களிலும் சிறு கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

சாச்சனா, பள்ளி செல்லும் குழந்தையாக இருப்பார் என பலரும் நினைத்தனர். ஆனால் அதுதான் இல்லை. 

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாச்சனா, தன்னை பற்றிய விவரங்களை அவரே தெரிவித்திருக்கிறார். 

சாச்சனாவிற்கு தற்போது 21 வயது ஆகிறதாம். இவர் சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் கல்லூரியில்தான் பட்டப்படிப்பு படித்திருக்கிறார். 

சாச்சனா, பிக்பாஸ் இல்லத்திற்குள் பல்வேறு கனவுகளுடன் நுழைந்தார். ஆனால், போட்டி ஆரம்பித்து 24 மணி நேரத்திற்குள்ளாகவே அவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

சாச்சனாவின் வயது குறித்த விவரமும், அவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள தகவலும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link