ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி சிலிண்டர், ஓய்வூதியம், FD விதிகள்.... முழு லிஸ்ட் இதோ

Tue, 31 Dec 2024-12:08 pm,

நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. நாளை முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் எற்படவுள்ளன. இவற்றின் தாக்கம் கண்டிப்பாக சாமானியர்களின் நிதி நிலை மீது இருக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

வழக்கமாக, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் விலையை அரசாங்கம் மாற்றியமைக்கிறது. சமீபத்தில், 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை கணிசமான ஏற்ற இறக்கத்தை கண்டு வருகின்றது. இருப்பினும், 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை நீண்ட காலமாக மாற்றப்படாமல் உள்ளது. ஆகையால், எல்பிஜி சிலிண்டர்களுக்கான மற்றொரு விலை மாற்றம் இந்த மாதம் எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஃப் உறுப்பினர்கள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க பலனைப் பெறக்கூடும். இனி ஏடிஎம்களில் இருந்து இபிஎஃப் பணத்தை (EPF Amount) எடுக்கலாம். தகவல் தொழில்நுட்ப அமைப்பு மேம்படுத்தலின் ஒரு பகுதியாக தொழிலாளர் அமைச்சகம் இந்த அம்சத்தை தீவிரமாக உருவாக்கி வருகிறது. தொழிலாளர் செயலாளர் சுமிதா தாவ்ரா சமீபத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் PF பணத்தை வித்டிரா செய்யும் செயல்பாட்டின் ஒட்டுமொத்த சேவை தரத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில், ஜனவரி 1, 2025 முதல், UPI 123Pay -ஐப் பயன்படுத்தி ஃபீச்சர் போன்களில் ரூ.10,000 வரை UPI பேமெண்ட்களைச் செய்யலாம் என அறிவித்தது. இத்தகைய பரிவர்த்தனைகளுக்கான முந்தைய வரம்பு ரூ.5,000 ஆகும்.

விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பாதுகாப்பற்ற கடன்களுக்கான வரம்பை ரூ.2 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ஜனவரி 1, 2025 முதல், புதிய விதிகள் அமலுக்கு வரும். முன்னர் இந்த வரம்பு ரூ.1.60 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை (NSE) தனது ஒப்பந்தங்களின் கான்ட்ராக்டுகளின் காலாவதி நாளில் மாற்றத்தை அறிவித்தது. இது ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். NSE இந்த மாற்றம் தொடர்பான சுற்றறிக்கையை நவம்பர் 29 அன்று வெளியிட்டது. FinNifty, MidCPNifty மற்றும் NiftyNext50 -க்கான மாதாந்திர ஒப்பந்தங்கள் இப்போது அந்தந்த மாதத்தின் கடைசி வியாழன் அன்று காலாவதியாகும். இதேபோல், BankNiftyக்கான மாதாந்திர மற்றும் காலாண்டு ஒப்பந்தங்கள் காலாவதியாகும் மாதத்தின் கடைசி வியாழன் அன்று காலாவதியாகும்.

புதிய ஆண்டில் கார் வாங்குவதற்கு அதிக பணம் செலவழிக்க வெண்டி வரலாம். ஜனவரி 1, 2025 முதல், Maruti Suzuki, Hyundai, Mahindra, Honda, Mercedes-Benz, Audi மற்றும் BMW போன்ற முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகனங்களின் விலையை 3% வரை உயர்த்தும். உற்பத்திச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டு நிம்மதி அளிக்கும் வகையில் அமையும். ஜனவரி 1, 2025 முதல், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வூதியம் பெறுவதற்கான விதிகளை எளிதாக்கியுள்ளது. இப்போது ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக அவர்களுக்கு கூடுதல் சரிபார்ப்பு எதுவும் தேவையிருக்காது. இந்த வசதி ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) பெரும் நிவாரணத்தை அளிக்கும்.

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இவை ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். புதிய விதிகளின்படி, பிரைம் வீடியோவை ஒரு பிரைம் கணக்கிலிருந்து இரண்டு டிவிகளில் மட்டுமே இனி ஸ்ட்ரீம் செய்ய முடியும். மூன்றாவது டிவியில் பிரைம் வீடியோவைப் பார்க்க விரும்பினால், கூடுதல் சந்தா எடுக்க வேண்டும். முன்னர் பிரைம் உறுப்பினர்கள் ஒரு கணக்கிலிருந்து ஐந்து சாதனங்களில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.

NBFC -கள் மற்றும் HFC -களுக்கான நிலையான வைப்பு தொடர்பான விதிகளை RBI மாற்றியுள்ளது. புதிய விதிகள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும். இந்த மாற்றங்களின் கீழ், டெபாசிட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான சில விதிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து டெபாசிட்களை எடுத்துக்கொள்வது, லிக்விட் அசெட்டின் ஒரு பகுதியை பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் வைப்புகளை காப்பீடு செய்வது போன்ற மாற்றங்கள் இதில் அடங்கும்.

இந்த விதி மாற்றங்கள் பற்றிய புரிதல் இருப்பது மிக அவசியமாகும். இதன் மூலம் தெவையற்ற தாமதங்களை தவிர்ப்பதோடு, நமக்கு கிடைக்கும் வசதிகளையும் நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link