செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் உங்கள் மகளை லட்சாதிபதியாக்கலாம்!

Sat, 20 May 2023-3:42 pm,

செல்வ மகள் சேமிப்பு திட்டம் உங்கள் மகளை லட்சாதிபதியாக ஆக்கும். இதற்கு, உங்கள் மகள் பிறப்பிலிருந்தே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ்,18 ஆண்டுகளுக்குப் பிறகு,  பாதித் தொகையைத் திரும்பப் பெறலாம். 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டித் திருத்தம் செய்யப்படுகிறது. ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இப்போது இந்த ஆண்டு வட்டி 8 சதவீதமாக உள்ளது. முன்னதாக இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் 7.60 சதவீத வட்டியை வழங்கியது. அதாவது, 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில், வட்டி 40 bps அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கலாம்.

சுகன்யா சம்ரிதி கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ஒருவர் தனது குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, 12 தவணைகளில் ரூ. 12,500 முதலீடு செய்திருந்தால், இந்தக் கணக்கின் முதிர்ச்சியில் 8% வட்டி வருமானம் கிடைக்கும். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தொடர்ச்சியான முதலீட்டிற்குப் பிறகு, மகளுக்கு 21 வயதாகும்போது, ​​முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறலாம். SSY திட்டத்தில் முதிர்ச்சியில் சுமார் 60 லட்சம் பெறலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link