OTTல் வெளியாகியுள்ள 5 புதிய தென்னிந்தியத் திரைப்படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Sun, 05 May 2024-3:51 pm,

மஞ்சுமெல் பாய்ஸ்

நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற மலையாளத் திரைப்படம் Disney+ Hotstar தாளத்தில் வெளியாகி உள்ளது.

தில்லு ஸ்கொயர்

சித்து ஜொன்னலகட்டா, அனுபமா பரமேஸ்வரன், முரளிதர் கவுட், முரளி சர்மா, பிரின்ஸ் செசில், அனிஷ் குருவில்லா ஆகியோர் நடித்துள்ள தில்லு ஸ்கொயர் திரைப்படம் தற்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

டியர் 

ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான டியர் படம் தற்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 11 அன்று இப்படம் திரையரங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிரேமலு

பலரது இதயங்களை வென்ற மலையாள படமான பிரேமலு தற்போது Disney+ Hotstar தாளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நஸ்லென், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன் மற்றும் அல்தாஃப் சலீம் ஆகியோர் நடித்துள்ளனர்.

பேமிலி ஸ்டார்

விஜய் தேவரகொண்டா, மிருணால் தாக்கூர், ஜகபதி பாபு, வெண்ணேலா கிஷோர், ரவி பிரகாஷ், திவ்யன்ஷா கௌசிக் ஆகியோர் நடிப்பில் வெளியான தி ஃபேமிலி ஸ்டார் படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link