செவ்வாய்ப் பெயர்ச்சியால் ஏற்படும் குருமங்கள யோகத்தால் குபேரருக்கு நண்பராகும் 5 ராசிகள்!
செவ்வாய் பகவான், வீரத்தை அளிப்பவர். அதனால்தான், செவ்வாயின் அதிதெய்வம் தேவசேனாதிபதியான முருகனாக இருக்கிறார். பூமிக் காரகன், ரத்த உறவுகளுக்கு காரகன் மற்றும் யுத்த காரகன் என வீரத்திற்கும், பாசத்திற்கும் காரகத்துவம் பெற்றுள்ள செவ்வாய் கிரகம் வலுவிழந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும்.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலம் குன்றினால் தோஷம் என்றால், பலம் பொருந்தினால் வீரமானவராகவும், சொத்து சுகம் மிக்கவராகவும் இருப்பார். இப்படிப்பட்ட செவ்வாய் கிரகம் ஜூலை 12ம் நாளன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறது.
செவ்வாய் கிரகம், நிலம், பூமி என நிலையான சொத்துக்கள் ஒருவருக்கு இருப்பதையும் இல்லாததையும் சொல்வது ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலை தான்
இப்படி வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்களை முடிவு செய்யும் செவ்வாய், ரிஷப ராசிக்குக் ஜூலை 12ம் தேதியன்று பெயர்ச்சியாகிறார். அங்கு ஆகஸ்ட் 26-ம் தேதி வரை இருந்து அருள்பாலிக்கிறார். தற்போது குரு பகவான், ரிஷபத்தில் இருக்கும் நிலையில், செவ்வாயும் ரிஷபத்திற்கு செல்வதால், குருவும் செவ்வாயும் இணையும் குரு மங்கள யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் பலன் சில ராசிக்காரர்களுக்குக் கிடைக்கும்
மீன ராசிக்காரர்களுக்கு தொழிலில் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பு நல்ல நிலையை அடைய உதவும். பல்வேறு மூலங்களில் இருந்து வருமானம் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதால், முதலீடுகள் செய்யும் எண்ணமும் தோன்றும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும் இந்த சமயத்தில், மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்
எதிர்பாராத பண வரவை மேஷ ராசிக்கு கொடுக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அருமையான பலன்களைக் கொடுக்கும். இல்லற வாழக்கை சுகமாக இனிக்கும், வராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த கடன் தொகை வந்து சேரும். மேஷ ராசியினருக்கு, குடும்பத்திலும், தொழிலுலும் அந்தஸ்தும் கெளரவமும் அதிகரிக்கும்
செவ்வாயும் குருவும் இணைவதால் ஏற்படும் நல்ல பலன்களை அனுபவிப்பதில் சிம்ம ராசி முன்னிலை வகிக்கிறது. இதுவரை இருந்த பணக்கஷ்டம், மனக்கஷ்டங்கள் தீரும். குடும்பத்தினரின் ஆதரவு மனதில் மகிழ்ச்சியை உருவாக்கும். வேலையிலும் குடும்பத்திலும் இணக்கமான உறவு இருக்கும் என்பதால் மனநிம்மதி ஏற்படும்
மகரம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய்ப் பெயர்ச்சி அருமையாக இருக்கும். தைரியம் அதிகரிக்கும், வியாபாரத்தில் முதலீடு செய்யும் தைரியம், நல்ல லாபத்தைக் கொடுக்கும். அட்வான்ஸ் கொடுத்து, நீண்ட காலமாக கைக்கு வராமல் இருந்து வந்த சொத்து விவகாரங்கள் முடிவுக்கு வந்து பத்திரப் பதிவை செவ்வாய் நடத்தி வைப்பார் .