இந்தியாவில் 3 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயில் அறிமுகமானது மாருதி ஆல்டோ K10
2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 இல் வடிவமைப்பு வித்தியாசமாக உள்ளது. முன்புறம் பழைய ஆல்டோ கே10 போன்ற எதுவும் இல்லை, அறுகோண மெஷ் மற்றும் வளைந்த ஹெட்லேம்ப்களுடன் முன்பக்கத்தில் கருப்பு கிரில் உடன் வருகிறது.
2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், ஸ்டீல் ரிம்கள் மற்றும் பாடி லைன்களும் இடம்பெற்றுள்ளன.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் சாலிட் ஒயிட், சில்க்கி சில்வர், கிரானைட் கிரே, சிஸ்லிங் ரெட், ஸ்பீடி ப்ளூ மற்றும் எர்த் கோல்ட் ஆகிய ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
மாருதி சுஸுகி புதிய Alto K10 ஹேட்ச்பேக்கை இன்று இந்தியாவில் ரூ.3.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில் புதுப்பிக்கப்பட்ட கே-சீரிஸ் 1.0 லிட்டர் எஞ்சின் 65.7 பிஎச்பி வரையும், 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் AMT (AGS) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு சுமார் 25 கிமீ மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது.