Maruti Suzuki வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: இலவச சேவையின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது
முன்னதாக இலவச சேவையின் கடைசி தேதி 30 ஜூன் 2021 வரை இருந்தது. கொரோனா காலத்தில் தனது வாடிக்கையாளர்களின் வசதியை மனதில் வைத்து நிறுவனம் காலக்கெடுவை நீட்டித்து இந்த முடிவை எடுத்துள்ளது. (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)
உங்கள் காரின் இலவச சேவை மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமானது 15 மார்ச் 2021 முதல் 30 ஜூன் 2021-க்குள் காலாவதியாகிவிட்டால், இந்த நீட்டிக்கப்பட்ட சேவையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். (படம்: ராய்ட்டர்ஸ்)
உங்கள் காரின் இலவச சேவையின் தேதி காலாவதியாகிவிட்டால், மேலே குறிப்பிட்ட தேதிக்குள் நீங்கள் வந்தால், நீங்கள் காரை சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். இதன் கீழ், உங்கள் காரின் முழுமையான செக்-அப் கிடைக்கும். நிறுவனம் லேபர் சார்ஜிலும் சலுகை அளிக்கின்றது. கூடுதலாக இலவச டாப் வாஷும் வழங்கப்படுகிறது. (படங்கள்: பி.டி.ஐ)
நீங்கள் விரும்பினால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.marutisuzuki.com/-க்குச் சென்று கார் சேவைக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)
வோக்ஸ்வாகன் இந்தியா, நிசான் இந்தியா, டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ், ஹோண்டா கோர்ஸ் இந்தியா மற்றும் ஹூண்டாய் ஆகியவை கார்களுக்கான இலவச சேவை மற்றும் உத்தரவாத காலத்தை நீட்டித்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்காது. (புகைப்படம்: பி.டி.ஐ)