இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது இவ்வளவு சுலபமா? இத்தனை நாள் தெரியாம போயிடுச்சே!
பழங்கள் மட்டுமல்ல, சில பழங்களின் தோல்களும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. அப்படிப்பட்ட பழங்களின் தோல்கள் (Fruit Peels For Diabetes) எவை என்று தெரிந்துக் கொள்ளுங்கள்
வாழைப்பழத்தோல் நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழத்தோல் நன்மை பயக்கும். வாழைப்பழத் தோலில் நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் இருப்பதால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மாம்பழத்தோல் மாம்பழம் இனிப்பான பழம் மற்றும் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல. இருப்பினும், மாம்பழத்தோலை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. அதில் அதிக சர்க்கரைத்தன்மை கிடையாது என்பதால், சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்
ஆப்பிள் தோல் ஆப்பிள் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மட்டுமல்ல, ஆப்பிள் தோலும் நன்மை பயக்கும் என்பது தெரியுமா? ஆப்பிள் தோல், வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
கிவி தோல் கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் அதன் தோல்களும் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. இதில் வைட்டமின் ஈ உள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்தால் கிவி தோலை சாப்பிடலாம்.
பீச் பழத்தோல்
ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது பீச் பழத்தோல். பீச் தோலை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது. இதன் தோலில் வைட்டமின் ஏ உட்பட பல வகையான பண்புகள் உள்ளன
பழங்களை உலர வைத்து உண்பதும் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். உலர வைக்கும்போது தோலுடன் சேர்த்து உலர வைப்பார்கள். அதில் ஆப்பிள் பழத்தை உலர வைத்து உண்பது பலருக்கும் தெரிந்த விஷயம்