குத்துசண்டை வீரர் மேரி கோம் வாழ்க்கையை மாற்றிய ஒரு சொல் !!

Thu, 07 Nov 2024-5:24 pm,

ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் முதல் குத்துசண்டை வீரர்.  1983 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சூராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள கங்காதேர் என்ற கிராமத்தில் பிறந்தார். 

மேரி கோம் குடும்பம் ஒரு ஏழை விவசாயக் குடும்பமாகும். ஆனால் மேரி கோம் கிராமத்தில் இருக்கும் மற்ற பெண்களை விட வித்தியசமாகவும் திறமையுள்ள பெண்ணாகவும் இருந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் தன் தந்தையுடன் வயல்வெளியில் வேலை செய்து வந்தார். மேரி கோமிற்கு சிறு வயதிலிருந்தே விளையாட்டு மீது அதிக ஆர்வம் இருந்தது.

ஆரம்பத்தில் மேரி கோமிற்கு அத்லெடிக்ஸில் ஆர்வம் இருந்தது, அதன்பின் குத்துசண்டை மீது ஆர்வம் வந்துள்ளது. பெண்களும் குத்துசண்டை விளையாட்டில் இருப்பர்கள் என்று ஆச்சர்யத்துடன்  கேட்ட மேரி கோம்.  அதன்பிறகு ஒருக்கட்டத்தில் குத்துசண்டையில் பெண்கள் இருக்கலாம் என்றவுடன், மேரி கோமிற்கு அதன் மீது காதல் வந்தது. அப்போது தன் பயிற்சியாளரிடம் சென்று இதுக்குறித்து கேட்டறிந்தார்.

மேரி கோமிற்கு முதல் எடுத்துக்காட்டு உலகின் பிரபலமான குத்துசண்டை வீரர் முகமத் அலி, அவரை போல் ஆகவேண்டும் என்று குத்துசண்டை மீது தீரா காதல் தோன்றியது.  இதற்கு அடுத்ததாக மணிப்பூரை சேர்ந்த குத்துசண்டை வீரர் டிம்கோ சிங் 1988 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர். இவரையும் மேரி கோம் எடுத்துக்காட்டாக மனதில் வைத்து வந்தார். 

மணிப்பூரை சேர்ந்த டிம்கோ சிங் தங்க பதக்கம் வென்றது, இந்த நிகழ்வு மேரி கோம் வாழ்க்கையில்  மிகப்பெரிய தூண்டலாக மாறியது.  இதன்பிறகு மேரி கோம் முழுவதுமாக குத்துசண்டையில் களமிறங்கினார். மேரி கோம் குடும்பத்திற்கு தெரியாமல் குத்துசண்டை பயிற்சி செய்து வந்தார்.  அதன்பின் 2000 ஆம் ஆண்டில் மணிப்பூரில்  நடந்த மாநில அளவிலான குத்துசண்டைப் போட்டியில் மேரி கோம் வெற்றிப்பெற்றார்.ஆனால் அதனை தன் பெற்றோரிடம் சொல்லவில்லை.

மேரி கோம் வெற்றிப்பெற்ற போட்டோஸ் நாளிதழில் வெளியானது. இதனைக் கண்ட மேரி கோம் பெற்றோர் இதற்கு விருப்பம் காட்டவில்லை. அவர்கள் இது சரிவராது என்று சொல்லி மேரி கோமை கண்டித்தனர். அதன்பின் மேரி கோம் தன் பெற்றோரை சமாதானம் செய்து ஒத்துழைப்பு செய்ய வைத்தார்.

மேரி கோமிற்கு பெற்றோர்கள் ஒரு கண்டிஷன் போட்டனர், இது மேரி கோம் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியது. இந்த கண்டிஷன் என்னவென்றால்  “உன்னை நீ பார்த்துக்கொள்” என்ற ஒரு சொல் மேரி கோமி சாதனைக்கு வழிக்காட்டியது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link