வக்ர சனியின் அருளால் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நன்மைகள், அமோகமான வாழ்க்கை
சனி பகவான்: சனியின் கோப பார்வை நம்மை பல வித இன்னல்களில் சிக்க வைக்கின்றது. அவர் நமக்கு துன்பம் கொடுத்தால் அதிலிருந்து மீள்வது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது. அதேபோல், அவரது அருள் பார்வை நம் மீது பட்டால், ஏழையும் அரசனாகலாம். அப்போது நாம் வாழ்வில் அதிகபட்ச முன்னேற்றம் அடைவதை யாராலும் தடுக்க முடியாது.
சனி வக்ர பெயர்ச்சி: தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். அவர் நவம்பர் 4 வரை இந்த நிலையிலேயே இருப்பார். அதன் பிறகு அவர் வக்ர பெயர்ச்சி அடைவார்.
ராசிகளில் அதன் தாக்கம்: வக்ர சனியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். எனினும், சனியின் இந்த இயகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: சனியின் வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு புது வாழ்க்கை துவங்குவது போன்ற புத்துணர்ச்சி இருக்கும். அனைத்து முயற்சிகளிலும் அபார வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு இப்போது வேலை நிச்சயம் கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்: சனி பகவானின் வக்ர நிலை துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும். இவர்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வாகன சுகம் பெறலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் தற்போது உள்ளது. எடுக்கும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.
மகரம்: இந்த காலத்தின் சனியின் வக்ர இயக்கத்தால் உங்கள் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். பணப்பற்றாக்குறையே இருக்காது. இது முதலீடு செய்ய நல்ல நேரம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.
சனி பகவானை மகிழ்விக்க: தன்னலம் கருதாமல் பிறருக்கு உதவி செய்பவர்களை சனி பகவானுக்கு பிடிக்கும். இவர்கள் மீது அவர் அருள் மழை பொழிவார். மனிதர்களை பாதிக்கும் ஏழரை சனி, சனி தசை ஆகியவற்றின் தாக்கத்தில் உள்ளவர்கள் அவர் அருளை பெற, கோளறு பதிகம், சனி சாலிசா ஆகிய ஸ்தோத்திரங்களை சொல்லலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.