2023 புத்தாண்டு ராசிபலன்: அடுத்த ஆண்டு அனைத்திலும் கலக்கப்போகும் ராசிகள் இவைதான்
ரிஷப ராசிக்காரர்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சொத்து வகையில் பெரிய லாபம் உண்டாகும். உங்கள் நிதி நிலையில் ஏற்றம் இருக்கும். சனியின் சிறப்பு அருள் இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இப்போது திருமண யோகம் உள்ளது.
இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களின் பல வித விருப்பங்கள் நிறைவேறும். புதிய வாகனம், புதிய வீடு வாங்கும் கனவு நிறைவேறும். இந்த புத்தாண்டு உங்களுக்கு பல விஷயங்களை அள்ளித் தரும் என்றே சொல்லலாம். வாகன சுகம் கிடைக்கும். இது தவிர வாழ்வில் பல வித சுகங்கள் எட்டிப்பார்க்கும்.
2023 ஆம் ஆண்டு நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான பெரிய லாபம் கிடைக்கும். தடைப்பட்ட ஒப்பந்தம் உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்தில் முதலீடு செய்யலாம். சொகுசு கார் வாங்கும் யோகம் இந்த ஆண்டு உங்களுக்கு உள்ளது.
2023 துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். பெரிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வசதிகளை பெறுவீர்கள். பனி இடத்திலும் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. கணவன் / மனைவி குழந்தைகள் மத்தியில் அன்பு அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்தவர்களின் கனவு நிறைவேறும். எதிர்பார்த்ததை விட சிறந்த கார் வாங்குவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். 2023ம் ஆண்டு முதலீட்டுக்கு ஏற்ற ஆண்டாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு அதிக லாபம் தரும் ஆண்டாக இருக்கும்.
வீடு, நிலம், வாகனம், திருமணம் போன்ற பெரிய கனவுகள் அனைத்தும் இந்த ஆண்டு நிறைவேறும். சொத்து சேர்ப்பதற்கு இந்த ஆண்டு மிகவும் நல்லது. மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். வாகன சுகம் காணலாம். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)