குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அமர்க்களம், ராஜாதி ராஜ யோக வாழ்க்கை ஆரம்பம்

Sun, 14 Apr 2024-8:51 am,

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அனுகூலமான பலனைத் தரும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். நீதிமன்ற விஷயங்களில் சாதகமான தீர்ப்பை பெறலாம். வியாபாரிகளுக்கு சாதகமாக பலன் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும். வருமானம் அதிகரிப்பதாலும் பண வரவுகளாலும் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

குரு பெயர்ச்சி காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு பரிபூரண அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். அபரிமிதமான முன்னேற்றத்தையும் வெற்றியையும் இந்த ராசிக்காரர்கள் பெறுவீர்கள். தொழிலில் சாதகமான பலன் உண்டாகும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வைப் பெறலாம். பண வரவு உண்டாகும்.

 

குரு பெயர்ச்சியில் மிதுன ராசிக்குப் விசேஷப் பலன் கிடைக்கும். உங்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கும், மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.  ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள்.

இந்த குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும்.  லாப வாய்ப்புகளைத் தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள், ஆசைகளும் அனைத்தும் நிறைவேறும். பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வைக் காணலாம். 

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் லாபகரமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விருப்பப்படி வெற்றி கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். தொழில் தொடங்க சாதகமான நேரம் அமையும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். 

கன்னி ராசிக்காரர்களும் 2024 இல் குரு பெயர்ச்சி அளவிலான நல்ல பலன்களை தரும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்படிருந்த அனைத்து பணிகளும் இப்போது நடந்து முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலைகளையும் தொடங்கலாம். பண வரவு அதிகமாகும். 

 

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமான பலனைத் தரும். தைரியம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு சாதகமான நேரம் அமையும். முதலீடு மூலம் லாபம் பெறலாம். புதிய வீடு, நிலம் வாங்க இது உகந்த நேரம். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். கடன் தருவது, பெறுவதை உடனுக்குடன் எழுதி வையுங்கள். 

 

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் தொட்டது துலங்கும். குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு செல்லப்போவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் புரமோசனும் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்.

 

தனுசு ராசிக்காரர்கள் வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சிக்கு பிறகு புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் சொந்த தொழில் தொடங்குவீர்கள். சுப காரியங்கள் கை கூடி வரும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் நிதி நிலை மேம்படும். வேலை அல்லது வணிகத்திற்காக பயணம் செய்யலாம். சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். அரசியலில் வெற்றி பெறலாம். பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும். வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம்.

 

கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் வெற்றி அருள் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், சம்பளம் உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். வணிகத்தில் லாபம் உண்டாகும். பணி இடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கலாம். ஆரோக்கியம் மேம்படும்.

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link