லியோனல் மெஸ்ஸின்னா சும்மாவா? சமூக ஊடகங்களில் தூள் கிளப்பும் கால்பந்து ரசிகர்கள்!
புதன்கிழமை அன்று டேவிட் பெக்காமின் மேஜர் லீக் சாக்கர் கிளப்பில் கையெழுத்திடும் விருப்பத்தை கால்பந்து ஐகான் லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தியதுமே இன்டர் மியாமி டிக்கெட் விலைகள் உயர்ந்து வருகின்றன.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் இன்டர் மியாமி டிக்கெட் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன, 1236 சதவிகித அளவுக்கு விலைகள் உயர்ந்துவிட்டதாம்!
ஒப்பந்தம் முடிவடைந்ததும் PSG என்று அறியப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியை விட்டு வெளியேறுவார் மெஸ்ஸி என்று கூறப்பட்டுவந்தது
மேஜர் லீக் சாசர் அணியில் லியோனல் மெஸ்ஸி சேரலாம் என்ற பேச்சும் இருந்தது
மெஸ்ஸிக்கு பல வாய்ப்புகள் இருந்தபோதும், அவர் மேஜர் லீக் சாக்கர் (MLS)க்காக விளையாடத் தேர்ந்தெடுத்தார். மெஸ்ஸியின் இந்த முடிவால் MLS அணிக்கு லாபம் கிடைத்துவிட்டது
இருப்பினும், மெஸ்ஸியின் மாறுதலால் MLS மட்டுமே லாபம் ஈட்டவில்லை. இண்டர் மியாமியில் சேர மெஸ்ஸியின் நடவடிக்கை போட்டி டிக்கெட்டுகளின் விலையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜூலை 21 அன்று குரூஸ் அசுலுக்கு எதிரான மெஸ்ஸி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்புகலுக்கு மத்தியில் முதல் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளின் விலை, $29ல் இருந்து $329 ஆக உயர்ந்தது. இண்டர் மியாமி ஹோம் மேட்ச்களுக்கான டிக்கெட் விலை $31 இலிருந்து $152 ஆக அதிகரித்தது.