ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு ரொம்ப சுமார்: தொந்தரவுகள் தொடரும்
ஜூலை மாதம் மேஷ ராசியில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை இருக்கும். இந்த சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல மற்றும் கெட்ட பலன்கள் கிடைக்கக்கூடும். கிரகங்களின் நிலை மாற்றத்தால் இந்த மாதம் பண இழப்பு ஏற்படலாம். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கடக ராசியில் பிறந்தவர்கள் தற்போதைக்கு சனியின் தாக்கத்தில் இருக்கிறார்கள். சனியின் நிலை மாற்றத்தால் ஜூலை 12 முதல் உங்கள் பிரச்சனை குறையலாம். இருப்பினும், ஜூலை முழுவதும் நிதி விஷயங்களில் கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை மாற்றம் காரணமாக கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஜூலை மாதம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். நிதி சம்பந்தமான கவலைகள் இருக்கும். இருப்பினும், மாத இறுதியில், வருமானத்தின் புதிய வழிகள் பிறக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் தாக்கம் முழு வீச்சில் இருக்கிறது. சனியின் தாக்கம் இருப்பதால் இந்த காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மகர ராசிக்காரர்கள் குறிப்பாக பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குடும்ப உறுப்பினர்களுடன் பொறுமையாக பேசிப் பழகுவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)