சனி பெயர்ச்சி 2025, குருவின் ராசியில் சனி: புத்தாண்டில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அமோகமான வாழ்க்கை
2025 புத்தாண்டு பிறந்து 3 மாதங்களிலேயே, மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் குருவின் ராசியான மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். 2027 ஜூன் மூன்றாம் தேதி வரை அவர் இந்த ராசியில் இருப்பார். குருவின் ராசியில் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டில் சனி பகவான் பகவான் தனது ராசியை மாற்ற உள்ளார். தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கும் சனி பகவான் 2025 இல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
மார்ச் 2025 இல் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் சனி பெயர்ச்சி காலம் பொற்காலமாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: ஜோதிட கணக்கீடுகளின் படி சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சுபமானதாக கருதப்படுகின்றது. அலுவலகப் பணிகள் மற்றும் வணிகத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
மிதுனம்: மீன ராசியில் மார்ச் மாதம் நடக்க உள்ள சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைக் கொண்டு வரும். சனியின் ராசி மாற்றம் வணிகத்தில் லாபத்தை அளிக்கும். மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவும் உதவியும் கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுது செலவழிப்பீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சி அனுகூலமான நன்மைகளை அள்ளித் தரும். இவர்களுக்கு ஏழரை சனியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நல்ல காலம் துவங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். கடன் தொல்லை நீங்கும். சனிபகவானின் அருளால் இப்போது நிலை மேம்படும். வாழ்க்கையில் வசதிகள் கூடும்.
ஏழரை சனி: சனிக்கிரக தோஷம் மற்றும் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்ய திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று அவரை வழிபடலாம். இங்கே அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷம் நிவர்த்தியாகி, சனி அருளால் நன்மைகள் ஏற்பட்டு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சனி பகவானின் பரிபூரண அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் கூறலாம். இது தவிர, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.