குபேர யோகம், கொட்டும் பண மழை: சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் வாழ்க்கை
சனி பகவான்: மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களையும் விட மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார்.
அதிக தாக்கம்: அனைத்து கிரகங்களையும் விட சனி பகவான் தான் ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்களுக்கு இருப்பார் என்பதால் அவருடைய தாக்கம் அனைத்து ராசிகளிலும் அதிகமாக இருக்கின்றது.
சனி வக்ர நிவர்த்தி: ஜூன் 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ரமானார். நவம்பர் 4 வரை அவர் இந்த நிலையில் இருப்பார். நவம்பர் 4 அன்று அவர் வக்ர நிவர்த்தி அடைவார்.
ராசிகளில் தாக்கம்: சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், 3 ராசிக்காரர்கள் சனி வக்ர பெயர்ச்சியால் அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் வரும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் சனியின் சஞ்சாரத்தால் சுப பலன்களைப் பெறுகின்றனர். இந்த நேரத்தில், அவர்களது வாழ்க்கையில் பல பெரிய நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், குடும்ப உறவுகளில் பலத்தையும் தரும். கணவன்-மனைவி உறவில் பலம் கூடும். பொருளாதார ஆதாயம் உண்டாகும்.
ரிஷபம்: இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் வலுவான தொழில் முன்னேற்றம் மற்றும் பொன்னான வாய்ப்புகளைப் பெறலாம். இது அவர்களுக்கு உயர் பதவியையும் பெரிய சம்பளத்தையும் பெற்றுத்தரும். அவர்களின் பொருளாதார நன்மைகளில் அதிகரிப்பு ஏற்படலாம், இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கையில் நிதி செழிப்பு வரலாம். வியாபாரம் விரிவடையும், திருமணமானவர்களுக்கும் இந்த நேரம் திருமணம் நிச்சயம் ஆகும்.
கும்பம்: சனி வக்ர பெயர்ச்சியின் போது கும்ப ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். பணப் பலன்களைப் பெறுவதோடு, வேலைத் துறையில் நல்ல வாய்ப்புகளையும் பெற முடியும். கூட்டாண்மை வேலையிலும் வெற்றி கிடைக்கும், இது அவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். இதனுடன் ஷஷ ராஜயோகத்தாலும் பலன் பெறலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.