நிறைவடையும் சனியின் வக்ர நிலை: அக்டோபரில் இந்த ராசிகளுக்கு மகாபுருஷ யோகம்
ஜோதிட சாஸ்திரப்படி அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளார். சனியின் இந்த சஞ்சாரத்தால் அனைத்து ராசிக்காரர்களும் சுப, அசுப பலன்களைப் பெறுவார்கள். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த மாற்றத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். ஜூலை மாதத்திலேயே சனி பகவான் மகர ராசியில் வக்ரமானார். தற்போது அக்டோபரில் மகர ராசியில் இயல்பு நிலைக்கு திரும்புவார். மகர ராசியில் சனி இயல்பு நிலைக்கு திரும்புவதால், ராசிகளில் மகாபுருஷ ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் சில விசேஷ ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரப் போகிறது. இந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சனிபகவான் மேஷ ராசிக்கு பத்தாம் வீட்டில் இருக்கப் போகிறார். இது தொழில் மற்றும் வேலைக்கான இடமாக கருதப்படுகிறது. எனவே, இந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நல்லது. புதிய வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்பும் உள்ளது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.
சனிபகவான் மீன ராசியின் கோச்சார ஜாதகத்தில் இருந்து 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது வருமானம் மற்றும் லாபத்தின் ஸ்தானமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சனியின் சஞ்சாரத்தால் வருமானம் கூடும். புதிய வருமானம் மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி உண்டாகும். புதிய தொழில், உறவுகள் உருவாகலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தை முடிப்பீர்கள். இந்த காலத்தில் முடிவாகும் ஒப்பந்தத்தால், எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழில் மற்றும் வியாபாரத்திற்கு சாதகமானது. சனி இந்த ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது செல்வம் மற்றும் பேச்சாற்றலின் இடமாகக் கருதப்படுகிறது. இந்த காலத்தில் திடீர் பணவர அதிகரிக்கும். சிக்கிய பணம் திரும்பி வரும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் கடனை திரும்ப கொடுப்பார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலை மேம்படும். பேச்சு மற்றும் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் சிறந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)