புதன் பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை உச்சம்
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன்.
ஒவ்வொரு மாதமும் கிரக பெயர்ச்சிகள் நடப்பது உண்டு. இந்த கிரக பெயர்ச்சியின் பொழுது ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைக்கும். அதில் வரும் மார்ச் 7 ஆம், தேதி காலை 8:38 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார்.
இன்னும் 3 நாட்களில் புதன் மீன ராசியில் பயணம் செய்யப்போவதால் உத்வேகம், அறிவு, அதிர்ஷ்டம், புத்திசாலித்தனம் எந்த ராசிகளுக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களின் மதிப்பு மற்றும் மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபார சிறப்பாக இருக்கும். லாபம் பெருகும். பணியிடத்தில் நல்ல சூழல் நிலவும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் நல்ல நாட்கள் தொடங்கும். வியாபாரத்தில் பண பலம் அதிகரிக்கும், நிதி நெருக்கடிகள் நீங்கும். திருமண வாழ்க்கை வாழக்கூடியவர்களுக்கு உங்கள் மனைவியுடன் உறவு பலப்படும். மரியாதை அதிகரிக்கும், உத்தியோகத்தில் மகிழ்ச்சியாக சூழல் நிலவும். லாபம் கிடைக்கும், உங்கள் நிதி நிலை மேம்படும்.
நிலுவையில் இருந்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். கலையில் ஆர்வம் அதிகரிக்கும்.நிதி ஆதாயம் உண்டாகும். நல்ல செய்திகளைப் பெறலாம். தொழில் வாழ்க்கையில் உறவுகளை வலுப்படுத்துவீர்கள். இந்த காலகட்டத்தில் முதலீடுகள் மூலம் நல்ல லாபம் ஈட்டுவதில் வெற்றி பெறுவார்கள்.
நிதி நிலை வலுவாக இருக்கும். வேலையில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீட்டு பொறுப்புக்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சொத்து, வாகனம் வாங்கும் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை