சனியின் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். அனைத்து கிரங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், அனைத்து ராசிகளிலும் இவரது தாக்கமும் மிக அதிகமாக உள்ளது. மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
வேத ஜோதிடத்தில், பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலைகள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைப்பதுடன் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். சனியின் பூரட்டாதி நட்சத்திரத்தின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...
மேஷம்: பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் இடத்தில் சனி பெயர்ச்சி அடைவதால் மேஷ ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். சொத்து, செல்வம் பெருக வாய்ப்புகள் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். புதிய வருமானம் மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சுப பலன்களை தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும்.
கும்பம்: பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்தில் சனி இருப்பது கும்ப ராசியினருக்கு நன்மை பயக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்குவதற்கான சுப வாய்ப்புகள் உருவாகும். தொழில், வியாபாரம் செய்வதற்கு சாதகமான சூழல் அமையும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும்.
சனி மூல மந்திர ஜபம்: "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", - 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.