இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்
மேஷம்: சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை கொண்டு வரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். செல்லச் செழிப்புகள் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பயிற்சி லாபகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். எனினும் சுக்கிரன் பெயர்ச்சி காலத்தில் உங்கள் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். குழப்பமும் சில சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுபமாக இருக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். கோயில்களுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களின் பொருளாதார நிலை முன்னேற்றம் காணும். அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான முழுமையான பலன் இப்பொழுது கிடைக்கும். பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்: சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லலவையான பலன்களை கொண்டு வரும். இந்த காலத்தில் பிறருக்காக வாதாடுவதையும் நிதி உதவி செய்வதையும் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். நிதி நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சியான பலன்களை அளிக்கும். கணவன் மனைவி இடையே புரிதலும் அன்பும் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான, அமைதியான சூழல் இருக்கும்.
துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் வாழ்க்கை சுமுகமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் புரிதலும் அன்பும் அதிகரிக்கும். ஆன்மீக பணிகலில் நாட்டம் அதிகரிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
தனுசு: நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த நிதி சிக்கல்கள் இப்பொழுது தீரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன் இப்பொழுது தெரியும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆளுமை மேம்படுவதோடு உங்கள் புகழும் அதிகரிக்கும்.
கும்பம்: சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்காதது போல் தோன்றும். எனினும் பலனை பற்றி யோசிக்காமல் உங்கள் கடமையை செய்வது நல்லது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.
மீனம்: சுக்கிரன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு வரும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மெய்ப்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.