அடம் பிடித்து நினைத்ததை சாதிப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள்: நீங்களும் இந்த ராசியா?

Wed, 23 Mar 2022-8:04 pm,

இந்த ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவரது இந்த இயல்பு அவரது வாழ்க்கையில் மிகவும் உதவுகிறது. அவர்கள் நிர்ணயித்த இலக்கை, அதை அடைந்த பிறகுதான் நிம்மதியாக மூச்சு விடுகிறார்கள். செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு அவர்களை பயமற்றவர்களாகவும் தைரியமாகவும் ஆக்குகிறது, இது அவர்கள் வெற்றிகரமாக இருக்க உதவுகிறது.

துலாம் ராசிக்காரர்களுக்கு எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எந்தவொரு இலக்கையும் அடைய கடினமாக உழைக்க அவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். அவர்களுடைய இந்த குணத்தால்தான் அனைவரும் அவர்கள் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். துலா ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் எளிதாக உயர் பதவிகளை அடைவார்கள். 

விருச்சிக ராசிக்காரர்கள் அச்சமற்றவர்கள், துணிச்சல் மிக்கவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், சொஞ்சம் சுயநலவாதிகள். அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம், இதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். விருச்சிக ராசிக்காரர்களுடன் போட்டி போடுவது எளிதல்ல. இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பொதுவாக அதிகப்படியான முன்னேற்றத்தை அடைவார்கள். 

மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். முடிவெடுத்த வேலையை முடித்தால்தான் இவர்களால் இயல்பாக இருக்க முடியும். இவரின் இந்த குணத்தால் தான் எந்த துறைக்கு சென்றாலும் இவர்களால் அதிக முன்னேற்றத்தை அடைய முடிகிறது. இவர்கள் செய்யும் செயல்களுக்கு நல்ல பலனும் நிச்சயமாக கிடைக்கிறது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link