புது மருமகளிடம் இந்த 5 விஷயங்களை எதிர்பாக்காதீங்க - மாமியார்களே முக்கியமா நோட் பண்ணுங்க
இந்திய குடும்ப அமைப்பில் பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சவால்கள் என்பது கொஞ்சம் நஞ்சம் அல்ல. அதிலும் மாமியார் - மருமகள் உறவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
அந்த வகையில், உங்களின் புதிய மருமகளிடம் நீங்கள் ஆரம்பத்திலேயே இந்த 5 விஷயங்களை மிகவும் எதிர்பார்த்தீர்கள் என்றால் குடும்ப வாழ்வில் பிரச்னைகள் எழும். எனவே, அதை தவிர்ப்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
இங்கு யாருமே முழுமையான மனிதரோ, தவறு செய்யாத மனிதரோ அல்ல. எனவே, உங்கள் மருமகள் எல்லாவிஷயத்திலும் கனகச்சிதமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அவர் உங்களுடன் ஒத்திசைந்து செயல்படும்போது அவரே உங்களை புரிந்துகொள்வார். எனவே உங்களின் எதிர்பார்ப்பு அவரை கடுமையான மன அழுதத்திற்கு ஆளாக்கலாம்.
ஒவ்வொருவரும் வெவ்வேறு கலாச்சாரம், பாராம்பரியத்தில் வளர்ந்திருப்பார்கள். எனவே புது மருமகள் உங்களின் குடும்ப வழக்கத்தை உடனே பின்பற்ற வேண்டாம் என எதிர்பார்த்தீர்கள் என்றால் பிரச்னையே வரும்.
புதிய மருமகள் உங்கள் குடும்பத்தின் மொத்த பாரத்தையும் உடனே தாங்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். வீட்டு வேலைகள் முதல் மற்ற பொருளாதார ரீதியிலான விஷயங்கள் வரை அனைத்திற்கும் சற்று நேரம் கொடுங்கள். அனைத்தையும் அவர் புரிந்துகொள்ள சற்று நேரம் எடுக்கும்.
உங்கள் புதிய மருமகள் அனைவரையும் அனுசரித்து, மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என எண்ண வேண்டாம். முதலில் அவர் உங்கள் குடும்பத்தினருடன் அதிகம் நேரம் செலவிடுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உறவினர்களின் பெயர்கள், அவர்களின் உறவுப் பெயர்கள் ஆகியவற்றை புதிய மருமகள் உடனே தெரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். இது உங்கள் மருமகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.