பல அட்டகாசமான அம்சங்களுடன் களமிறங்க இருக்கும் Moto G Play!

Mon, 21 Dec 2020-2:47 pm,

பட்டியலின் படி, மோட்டோ G ப்ளே (2021) குவால்காமின் நுழைவு நிலை ஸ்னாப்டிராகன் 460 செயலியில் இயங்கும். இந்த தொலைபேசி HD+ டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 10 அவுட்-ஆஃப்-பாக்ஸுடன் வரும் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் மோட்டோரோலா தொலைபேசியில் குறைந்தது 3 ஜிபி ரேம் இருக்க வாய்ப்புள்ளது.

முக்கிய விவரக்குறிப்புகள் தவிர, G பிளே (2021) இன் சில விவரங்களையும்  இந்த பட்டியல் கொண்டுள்ளது. ரெண்டர் முன்பக்கத்தில் ஒரு பெரிய பெசல்ஸ் உடன் டியூடிராப் நாட்ச்பகுதியைக் கொண்டுள்ளது. நாட்ச் பகுதியில் கேமராவைக் கொண்டுள்ளது. ஆற்றல் மற்றும் வால்யூம் பொத்தான்கள் வலது விளிம்பில் உள்ளன. ரெண்டர் பின் பேனலை வெளிப்படுத்தவில்லை. தொலைபேசியில் பின்புறமாக கைரேகை சென்சார் இருக்கும்.

மோட்டோ G ப்ளே (2021) அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ G 5ஜி போனின் அடுத்த பதிப்பாக இருக்கும், இது இந்தியாவின் மிகவும் மலிவு 5ஜி ரெடி போன் என்று அழைக்கப்படுகிறது. G பிளே போலல்லாமல், மோட்டோ G 5 ஜி மாடல்  இதன் ரூ.20,999 விலையுடன் இடைப்பட்ட பிரிவுக்கு நெருக்கமாக உள்ளது. 

5G தொலைபேசியில் 6.7 இன்ச் மேக்ஸ் விஷன் HDR 10Tஸ்ப்ளே 20: 9 விகிதத்துடன் உள்ளது. ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 750 ஜி செயலி மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்துடன் இயக்கப்படுகிறது. இது டர்போபவர் 20W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAH பேட்டரியில் இயங்கும். 

மோட்டோ G 5ஜி மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது – 48 மெகாபிக்சல் சென்சார் 8 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ், மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, மோட்டோ G 5ஜி 16 மெகாபிக்சல் பஞ்ச்-ஹோல் கேமராவுடன் வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link