உலகளவில் டாப் 5 இடத்தில் உள்ள பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?
இந்தியாவில் கிரிக்கெட்க்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஒரு வீரரை கடவுள் அளவிற்கும் கும்பிடும் சில ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில் உலகளவில் அதிகம் சொத்து வைத்துள்ள டாப் 5 கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா அவரது அசத்தலான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். அவரின் சொத்து மதிப்பு $60 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. லாரா பிராண்ட் ஒப்பந்தங்கள், பயிற்சியாளர் விதத்தில் வருமானம் பெறுகிறார்.
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் $70 மில்லியன் மதிப்புடன் இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். தற்போது ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனை, பயிற்சியாளர் மற்றும் தொழில்களை நிர்வகித்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட்டை தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்துள்ள விராட் கோலியின் நிகர மதிப்பு $92 மில்லியன் டாலர்கள் ஆகும். உலகளவில் வீரர்களின் சொத்து மதிப்பில் 3வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி தற்போது வரை ஐபிஎல்லில் விளையாடி வருகிறார். எம்எஸ் தோனியின் நிகர மதிப்பு 111 மில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது. இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் உலகளவில் அதிகம் சொத்து வைத்துள்ள கிரிக்கெட் வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு $170 மில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.