JFSL: இந்திய டிஜிட்டல் நிதிச் சேவைத் துறையிலும் ஆட்டத்தை தொடங்கும் முகேஷ் அம்பானி
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் (JIO FINANCIAL SERVICES) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இலிருந்து பிரிந்து புதிய நிறுவனமாக உருவாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, முகேஷ் அம்பானி, நிதிச் சேவைகளுக்கு எளிய, மலிவு மற்றும் புதுமையான டிஜிட்டல் முதல் தீர்வுகளை வழங்குவதை JFSL நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிவித்தார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அதன் நிதிச் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்ட்ரேடஜிக் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெடில் இருந்து பிரிவதாக மார்ச் 2023 இல் அறிவிப்பு வெளியானது
Reliance Strategic Investments Limited (RSIL) இன் பங்குகள், விரைவில் Jio Financial Services Limited என மறுபெயருடன் பங்குச் சந்தையில் நுழைகிறது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் எம்.டியுமான முகேஷ் அம்பானி நிறுவனத்தின் 2022-23 ஆண்டு கூட்டத்தில் பேசியபோது, ஜியோ நிதிச் சேவைகள் நிதிச் சேவைத் துறையில் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவில் டிஜிட்டல் நிதியை மாற்றத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்
RIL இன் 2022-23 ஆண்டு அறிக்கையில், எளிமையான, மலிவு மற்றும் புதுமையான டிஜிட்டல் முதல் தீர்வுகளை வழங்குவதே ஜியோ நிதிச் சேவைகளின் நோக்கம் என்று அம்பானி கூறினார். ஜன்தன் கணக்குகள், டிஜிட்டல் பணம் செலுத்துதல், ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் குறைந்த விலை தரவுகள் மூலம் நாட்டில் டிஜிட்டல் புரட்சி வேகமாக பரவி வருவதாக அம்பானி மேலும் கூறினார்.
நிதிச் சேவைகள் பல ஒழுங்குமுறை கட்டமைப்புகளுக்கு உட்பட்டவை என்று முகேஷ் அம்பானி கூறினார். சுதந்திரமான நிதிச் சேவை பிரிவு இந்திய சந்தையில் இருக்கும் வாய்ப்புகளை அணுகுவதற்கு அனுமதிக்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து பிரிந்த பிறகு, ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸின் பங்கு மதிப்பு 261.85 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது எதிர்பார்த்ததை விட அதிகமாகும். பிரிக்கப்பட்ட பிறகு, ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் ரிலையன்ஸின் புதிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.