மழைக்காலத்தில் வீட்டிலேயே இருந்து போர் அடிக்குதா? ‘இந்த’ 8 விஷயங்களை செய்யலாம்!
புத்தகம் படிப்பது:
ஒரு நாவலில் மூழ்குங்கள் முயற்சி செய்யுங்கள். அல்லது புதிய வகை புத்தகத்தை படிக்கலாம். மழையின் சத்தம் உங்கள் வாசிப்பை இன்னும் அழகாக்கும்.
படம் அல்லது சீரீஸ் பார்ப்பது:
நீண்ட நாட்களாக பார்க்க விரும்பிய படம் அல்லது தொடரை பாருங்கள். இது, உங்கள் பொழுதை ஜாலியாக கழிக்க உதவும்.
சமையல் அல்லது பேக்கிங் செய்வது:
உங்களுக்கு பிடித்தத்தை, பிடித்தவர்களுடன் செய்து மகிழுங்கள். அடுப்பில் இருக்கும் சூடு, வெளியில் இருந்து வரும் ஜில்லென்ற உணர்வை குறைக்க உதவும்.
விளையாட்டு:
ஜிக்சா புதிர் விளையாட்டுகள், போர்டு கேம்கள் அல்லது வீடியோ கேம்கள் மூலம் உங்கள் பொழுதை போக்கலாம்.
கைவினை பொருட்கள்:
பெயிண்டிங் செய்வது, கூடை பின்னுவது, எதையாவது உருவாக்குவது போன்ற வேலைகளில் உங்களை நீங்களே ஈடுப்படுத்தி கொள்ளலாம்.
சுத்தம் செய்தல்:
நீங்கள் இருக்கும் இடத்தை, டேபிளை, அலமாரியை சுத்தம் செய்து ஒழுங்கு படுத்தி வைக்கலாம்.
தியானம்:
இந்த பிசியான காலச்சூழலில் நம்மில் பலர் தியானம் செய்ய, நம்முடன் பேசிக்கொள்ள மறந்து விடுகிறோம். வீட்டில் இருக்கும் சமயத்தில் இதை செய்து உங்கள் மனதை அமைதிப்படுத்தலாம்.
நண்பர்கள்/குடும்பத்தினருடன் பேசுதல்:
உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கலாம். இதனால், நீங்கள் உங்களுக்குள் இருக்கும் உறவை ஆழமாக்க முடியும்.