நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த கண்டிப்பாக உணவில் சேர்க்க வேண்டியவை!
வெந்தயத்தில் அதிகளவு நார்சத்து நிறைந்துள்ளது, இதனை நீரிழிவு நோயாளிகள் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
ஓமத்தில் உள்ள அதிகப்படியான நார்சத்து உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சப்ஜா விதைகள் உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
உடல் எடை குறைப்பிற்கு பலரும் பயன்படுத்தும் ஆளி விதைகள் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதிலும் முக்கிய பங்கினை வகிக்கின்றது.
பூசணி விதையில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.