இரவில் தூங்க விடாமல் செய்யும் பயங்கரமான பேய் புத்தகங்கள்! தைரியம் இருந்தா படிங்க..

Thu, 16 May 2024-4:05 pm,

ஒரு சிலருக்கு பேய் போல விடிய விடிய புத்தகம் படிக்க பிடிக்கும். ஒரு சிலருக்கு, பேய் புத்தகங்களையே படிக்க பிடிக்கும். ஒரு பேய் படத்தை பார்க்கிறோம் என்றால் அந்த கதைக்குள்ளாகவே வாழ்வது போல இருக்கும். அப்படி, நமக்கு அதிகமான பய உணர்வை கடத்தும் பேய் புத்தகங்களை இங்கு பார்ப்போமா? 

The Shining :

தி ஷைனிங் புத்தகத்தை பிரபல ஆங்கில எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங்ஸ் எழுதியிருக்கிறார். இது, ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் புத்தகமாகும். ஒரு ஹோட்டலில் நடப்பது போன்ற இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த கதையை படித்த சிலருக்கு இரவில் தூக்கமே வரலையாம்!

The Exorcist:

இந்த புத்தகத்திற்கு அர்த்தம், பேய் ஓட்டுபவர் என்பதுதான். ஒருவருக்குள் ஆவி புகுந்து விட, அதை விரட்ட வருபவர் குறித்த கதைதான் இது. இதனை வில்லியம் பீட்டர் ப்ளாட்லி எழுதியிருக்கிறார். பேய் புத்தகங்களை விரும்பி படிப்பவர்கள், தங்கள் ஃபேவரட் லிஸ்டில் இதை வைத்திருக்கின்றனர். 

Hell House :

இந்த புத்தகத்தை ரிச்சர்ட் மாதீசன் எழுதியிருக்கிறார். ஒரு நகரில் இருக்கும் அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள்தான் இந்த புத்தகத்தின் கதை. 

IT:

இந்த புத்தகமும் படமும் மிகவும் பிரபலமானதாகும். இந்த கதை, 4 டீன் ஏஜ் பருவத்தினரிடம் இருந்துதான் ஆரம்பிக்கும். இதில், Childhood trauma மற்றும் அதை சுற்றி இருக்கும் அமானுஷ்யங்களை பற்றி அதிகமாக பேசியிருப்பர். 

Dracula:

ப்ராம் ஸ்டோக்கர் எழுதிய புத்தகம், ட்ராக்குலா. இதில், அமானுஷ்ய ஜீவராசியாக கூறப்படும் Vampire குறித்து எழுதியிருப்பார். சொல்லப்போனால், அந்த ரத்தம் குடிக்கும் அமானுஷ்ய சக்தியை இந்த உலகிற்கு தனது கதைகள் மூலம் அறிமுகப்படுத்தியதே இவர்தான்.

The Haunting Of Hill House :

ஷிர்லீ ஜாக்சன் எழுதியிருக்கும் புத்தகம், ஹாண்டிங் ஆஃப் ஹில் ஹவுஸ். இதனை நெட்ஃப்ளிக்ஸ், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தொடராகவும் எடுத்தது. வீட்டை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒருவர், தனது குடும்பத்தினருடன் ஒரு பெரிய பங்களாவிற்கு குடி வருகிறார். இந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களும் அதனால் அந்த குடும்பத்தினர் சந்திக்கும், இழக்கும் விஷயங்களும்தான் கதை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link